இலங்கை

ஐ.எம்.எப்பிடம் கையேந்தும் நிலை! அரசை எச்சரிக்கும் எதிர் தரப்பு

வரவு செலவு திட்டத்தில் இடதுசாரிபோக்கை உள்ளீர்க்காது ஐ.எம்.எப் உடனான நிபந்தனைகளை கொண்டு மக்கள் சக்தி வடிவமைத்துள்ளமை சிறப்பான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத் தெரிவித்துள்ளார். திட்டங்கள் சரியாக வகுக்கப்படாவிட்டால் மீண்டும் ஐ.எம்.எப்பிடம் கையேந்தும் நிலை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில்நாடாளுமன்ற அமர்வில் கருத்த தெரிவித்த அவர், வரவு செலவு திட்டத்தில், செலவு குறித்து ஆளும் தரப்பால் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெரிய விடயம் அல்ல.பிரச்சினை என்னவென்றால் வரவை எவ்வாறு ஈட்டப்போகின்றோம் என்பதே. இது தொடர்பில் எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை.

கன்னி வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கான நிதியை எங்கு இருந்து பெற்றுக்கொள்ள போகின்றோம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்களிடம் இருந்து வரும் அழுத்தங்களை சமாளிப்பதற்காக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரவு குறித்து எவ்வித கருத்துக்களும், கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை.

வரவு குறித்த கலந்துரையாடல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. வரவு செலவு திட்ட ஆவணத்தில் அழகான சொற்பிரயோகங்கள் இருந்தால் மாத்திரம் போதாது. அதனை செயற்படுத்துவதற்கன வழிமுறைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு இதன்மேல் நம்பிக்கை இல்லாது போகும்.

இலங்கை வரலாற்றில் முதல்முறைாயக இடதுசாரி அரசாங்கம் முன்வைத்த வரவுசெலவு திட்டத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த திட்டத்தில் கடந்த அரசாங்கங்களால் மதிப்பிடப்பட்ட அதிக செலவுடைய விடயங்களை குறைத்து மதிப்பிட்டுள்ளீர்கள். அவ்வாறான திட்டங்களுக்கான செலவீனங்கள் அதிகரிக்கும் என்றால் அதற்கான பணத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ள போகின்றீர்கள்.ஐ.எம்.எப்பிடம் கையேந்த போகின்றீர்களா? இதற்கு சரீயான தீர்வுகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடுங்கள்” என்றார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *