இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் அபாய எச்சரிக்கை

நடைமுறையில் வாகன இறக்குமதி அபாயகரமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் (18.02.2025) கலந்து கொண்டு உரையாற்றும் போதே  கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதத்திற்கு வரியை அதிகரிக்க வேண்டும். மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதே பிரதான பங்களிப்பு என ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.

நான் தேடி பார்த்த போது, வரியில் பாதி வாகன இறக்குமதியில் இருந்து வருகிறது. எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது.வரியுடன் மிகப்பெரும் தொகையை செலுத்தி இலங்கையில் வாகனங்களை கொண்டு வரும் அளவிற்கு செல்வந்தர்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *