2013 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் தனது பள்ளித் தோழியும் காதலியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். 7 ஆண்டுகள் கழித்து அழகிய பெண் குழந்தை பிறந்தது . ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சி கொடுத்தனர். குழந்தை இருக்கும் போது திடீரென பிரிவதாக அறிவித்தது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.
ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த படங்களில் டார்லிங் படத்தை விட அதிக ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் கொடுத்த படம் என்றால் பேச்சுலர் படம் . படத்தின் டீசர் வெளியான போதே சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்று ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தது.
பேச்சுலர் படத்தில் அறிமுகமானவர்தான் திவ்யபாரதி. மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்தார். பேச்சிலர் படத்திற்கு பிறகு திவ்யபாரதி கிங்ஸ்டன் படத்தில் ஜிவி பிரகாசுடன் நடித்தார். ஜிவி பிரகாஷ் – சைந்தவி பிரிவுக்கு நானா காரணம் என திவ்யபாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
கூறுகையில், ஜிவி பிரகாஷ் சைந்தவி மேம் விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு தற்போது அவர்கள் மீண்டும் இணைந்து நடத்தும் கச்சேரிகளை பார்ப்பதற்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கும் இரண்டு பேரும் இணைந்து பாடிய பிறை தேடும் இரவிலே பாடல் எல்லாம் இனிமேல் நம்மை யாரும் போட்டு அடிக்க மாட்டாங்க டார்கெட் பண்ண மாட்டாங்க என்று நினைச்சன்.
இப்போதான் அதிகமா அசிங்கப்படுத்துறாங்க.. அவங்க ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி என்றும் அவங்க வாழ்க்கையே நான் தான் கெடுத்துவிட்டேன் என பெண்களே அதிகமாக திட்டி வராங்க.. அதையெல்லாம் கேட்கும் போது படிக்கும் போதும் எந்த ஒரு ரிப்ளையும் பண்ணாமல் கடந்து சென்று வருகிறேன் என தெரிவித்து உள்ளார்.