இலங்கை

ஒரே நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவோருக்கு அறிவிப்பு

ஒரே நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு மட்டும் 24 மணி நேரம் கடவுச்சீட்டு சேவை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடயத்தை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் (Department of Immigration and Emigration) தெரிவித்துள்ளது.

நோக்கத்திற்காக பதிவு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை ஆறு மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *