இலங்கை

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

இலங்கையின் (Sri Lanka) பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்டுள்ள அறிக்கையில் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண் (NCPI) ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்க வீதம் 2025 ஜனவரி மாதத்தில் -4.0% ஆகக் குறைந்துள்ளது. 2024 டிசம்பர் மாதத்தில் -2.0% ஆக பதிவாகி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பணவீக்கமும் 2024 டிசம்பரில் -1% ஆக இருந்த நிலையில், 2025 ஜனவரியில் -2.5% ஆகக் குறைந்துள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம் 2024 டிசம்பரில் பதிவான -2.9% இலிருந்து -5.2% ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *