அம்பாந்தோட்டை துறைமுகத்தில் குவிந்துள்ள மணல் வண்டல் மண்ணை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக அதிகாரசபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில், துறைமுகத்தில் குவிந்துள்ள மணல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவதன் மூலம் துறைமுகத்தின் கடல்சார் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. துறைமுக கட்டுமானத்தின் போது திட்டமிடப்பட்ட தரநிலைகளுக்குத் திரும்ப முடியும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு சுமார் இரண்டு மாதங்கள் வரை செல்லும் என ஹம்பாந்தோட்டை துறைமுக அதிகாரசபை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.










