அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். க்கிய தேசியக் கட்சியின் (United National Party) செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார் நாடாளுமன்றத்திற்கு திரும்பும் நோக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “பெராரி ரக வாகன உரிமம் உள்ளவர்கள், எல் போர்ட் உரிமம் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை. நாடு திவாலான போது தான் ஏற்றுக்கொண்ட சவாலை வெற்றிகரமாக நடத்தியமை தொடர்பில் பணிவான மகிழ்ச்சி இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் நாட்டின் பொறுப்பை ஒரு புதிய குழுவிடம் ஒப்படைத்துள்ளதால், அந்தக் குழு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.