இலங்கை

கட்டார் நிறுவனத்திடமிருந்து பெட்ரோலிய கொள்வனவு

கட்டார் அரசாங்கத்திற்கு சொந்தமான ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்திடம் இருந்து இரண்டு பெட்ரோலியப் பொருட்களை வாங்குவதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்படக்கூடிய அனைத்து விதமான எரிசக்தி நெருக்கடிகளையும் தடுக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. பெட்ரோலியப் பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்வதற்கு ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனத்துடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன.

‘கட்டார் எனர்ஜி’ ஒரு அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் அத்தகைய ஒப்பந்தத்தின் கீழ் எரிசக்தி கொள்முதல் சாத்தியமாகும் என ராஜகருணா தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன்(UAE) இதே போன்ற திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்நாட்டில் தனியார் நிறுவனங்கள் மட்டுமே பெட்ரோலிய விற்பனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *