சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட மேலதிக பணத்தை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் செலவிடாமல் திருப்பி வழங்கியுள்ளார். வெளிநாட்டுப் பயணத்தின் பின்னர் ஏற்பட்ட கூடுதல் செலவுகளுக்காக வழங்கப்பட்ட பணத்தை இவ்வாறு ஒப்படைத்துள்ளார்.
அவர் 240 அமெரிக்க டொலர்களை அமைச்சின் பொருளாளரிடம் ஒப்படைத்துள்ளார். அது தொடர்பான ரசீது அதன் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் 11 முதல் 16ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு 240 அமெரிக்க டொலர்களை மீதப்படுத்தியுள்ளார். இலங்கை நாணயத்தின் பெறுமதி அது 69,960 ரூபாவாகும்.
செலவு செய்ய பெருந்தொகை பணத்தை அரசியல்வாதிகள் கோரும் நிலையில், கொடுக்கப்பட்ட சிறிய பணத்தையும் மீதப்படுத்திய அமைச்சரின் செயற்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.