என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் பாடகியாக அறிமுகம் ஆனவர் கல்பனா. அப்பா டி.எஸ்.ராகவேந்திரா பிரபல நடிகர் தான். கல்பனாவும் சில படங்களில் நடித்து இருக்கிறார். 44 வயதாகும் கல்பனா ஐதராபாத்தில் வசித்து வந்தார்.
அவர் இன்று வீட்டில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார் கல்பனா. சுயநினைவின்றி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துமனையில் சேர்த்து இருக்கின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கல்பனாவின் கணவரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இரண்டு நாட்களாக தான் வீட்டில் இல்லை என கல்பனாவின் கணவர் கூறி இருக்கும் நிலையில், சந்தேகத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.