இலங்கை

6000 தமிழர்களுக்கு நடந்தது என்ன..! ரணிலின் பதில்

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinge), சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து வினவிய போது அலட்சியமாக பதிலளித்துள்ளார். செய்தியாளரால் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வினவிய போதே பதிலளிக்க தொடங்கியுள்ளார்.

நேர்காணலின் போது, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என அடையாளம் காணப்பட்டுள்ள 6000 மக்களில் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என வினவப்பட்டுள்ளது. முதலில் அலட்சியமாக பதிலளித்த ரணில் விக்ரமசிங்க பின்னர், “14000 பெயர்கள் வந்திருந்தன, எனவே நாங்கள் அதை இரண்டு தொகுதிகளாக விசாரணை செய்ய முயற்சிக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் கலவரத்தில் உள்நோக்கத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் வெளியே இருந்தவர்கள் என்ற இரு வகையாகும்” என கூறியுள்ளார். 6000 பேரில், 616 மக்கள் குறித்த தகவல்களே கண்டுபிடிக்கட்டுள்ளன என்று செய்தியாளர் தெரிவித்த போது,

பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, எமது நாட்டில் அனைவரையும் பாதித்திருந்த இனப்பிரச்சினைக்கு நாங்கள் முகங்கொடுத்திருந்தோம். இதனை எவ்வாறு சரி செய்யப் போகின்றோம் என முயற்சிப்பதற்கு வாய்ப்பளியுங்கள்” என கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த தமிழீழ விடுதலை புலிகளுடனான உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டதா என வினவப்பட்டுள்ளது. “எந்த சமூகத்தினருக்கும் நீதி வழங்கப்பட்டிருக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *