இலங்கை

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

புகலிடம் மறுக்கபட்டவர்களே அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதி வரை 7300 பேரை நாடு கடத்தியுள்ளதாக முகவர் அமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையான காலப்பகுதிகளை ஒப்பிடுகையில் கடந்த வருடத்திலேயே வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்னர். பல தமிழர்களும் அடங்கும். சமகாலத்தில் கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வருடங்களில் விசிட்டர் விசா மூலம் எதிர்பார்த்ததை விட பல மடங்கான வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் நுழைந்ததுடன், பெரும்பாலானவர்களில் கனடாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *