தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை மார்ச் 30 முதல் ஆரம்பக்கப்படும் என்று இண்டிகோ அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக புதிய வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வணிகம், ஓய்வு மற்றும் மதப் பயணிகளுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்குவதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஐந்து நகரங்களான பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் திருச்சிராப்பள்ளியிலிருந்து இலங்கைக்கு 60க்கும் மேற்பட்ட வாராந்த விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.