ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமைகளை இரத்து செய்ய தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னனி கோரிக்கை முன்வைத்துள்ளது.
படலந்தா வதை முகாம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பரிந்துரைகளை செயல்படுத்துவதன் மூலம் பணியைச் செய்ய முடியும் என்று அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களுடனான கலந்துரையாடலில் ரணில் கூறிய விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
படலந்த வதை முகாம் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், நாகமுவ தெரிவித்துள்ளார்.
ஜனதா விமுக்தி பெரமுனவின் பெரும்பான்மையினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசாங்கம் அந்தப் பணியை நிறைவேற்றுமா என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துமிந்த நாகமுவ இதனை கூறியுள்ளார்.