இலங்கை

இஸ்லாமியத் திருமணச் சட்டம் குறித்து விமர்சித்த அர்ச்சுனா

இஸ்லாமிய திருமணச் சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா (Ramanathan Archchuna) விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்.

உரையாற்றுகையில், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களில் உரிய முறையில் திருத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் 12 வயது திருமணம் குறித்தும் விவாகரத்தின் போது ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என்று பாகுபாடு காட்டப்படுகின்றது.

சட்டம் திருத்தப்பட வேண்டும். ஜம்மியத்துல் உலமாவும் இந்த விடயத்தில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அர்ச்சுனாவின் உரையின் போது குறுக்கிட்ட பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விவாக விவாகரத்து சட்டங்கள் குறித்து தெரியாமல் பேசுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *