உலகம்

கனடாவின் புதிய பிரதமர் தேர்வு : விடைபெறுகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) பதவி விலக உள்ளதால் கனடாவின் (Canada) புதிய பிரதமர் (09.03.2025) தேர்வு செய்யப்பட உள்ளார் என ஊடகங்கன் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடா பிரதமராக இருக்கும் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பதவி விலகி விட்டார்.

அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டார். இதையடுத்து கனடாவின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்பட உள்ளார்.

59 வயதான மார்க் கார்னி (Mark Carney) அடுத்த பிரதமராகலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

கனடாவுக்கு எதிராக ட்ரம்ப் வர்த்தக போர் அறிவித்துள்ள இந்த நேரத்தில் அதை சமாளிக்கும் வகையில் மார்க் கார்னி செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக உரையாற்றியுள்ளார். புதிய பிரதமரை லிபரல் கட்சி அறிவிக்கவுள்ள நிலையிலேயே தனது கடைசி உரையில் ட்ரூடோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து தனது இறுதி உரையை நிகழ்த்தியுள்ளார். இதன்போது, கனடா மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உருக்கமாக பேசியுள்ளார் ட்ரூடோ.

பிரதமர் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும், நான் கனடா மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்காக உழைத்தேன். மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளேன். மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதியாக சொல்கிறேன் எனவும் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *