வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை அறிவித்துள்ளது.
தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
தேங்காய் விலை அதிகரித்தல், தென்னை உற்பத்திகளின் வீழ்ச்சி உட்பட தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக நேற்று(10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மூன்று வருடங்களைப் பார்க்கும் போது 2024 ஆண்டில் தென்னை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் 25 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பயிரிடும் திட்டத்தைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது.
தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்ச்சி கடந்த மாதம் 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.