இலங்கையின் பெண் அரசியல்வாதி, அச்சுறுத்தல் காரணமாக, நியூசிலாந்துக்கு தப்பிச் சென்றுள்ளார். 32 வயதான அவருக்கு நியூசிலாந்தில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகம் ஓன்று தெரிவித்துள்ளது. எனினும் அவரின் பெயரை ஊடகம் குறிப்பிடவில்லை.
முக்கிய அரசியல்வாதியின் நண்பர்கள், தனது வாழ்க்கையை மேம்படுத்த, குறித்த அரசியல்வாதியுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்ததாகவும், அந்த சம்பவம் குறித்து ஒரு நண்பர் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும், இலங்கையின் பெண் அரசியல்வாதி, தீர்ப்பாயம் ஒன்றிடம் சாட்சியமளித்துள்ளார்.
மைத்துனர் உந்துருளி விபத்தில் இறந்தபோது, அந்த பிரேதப்பெட்டியில் ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டது, அதில் தாமே அடுத்ததாக கொல்லப்படபோவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும், குறித்த பெண் சாட்சியம் அளித்துள்ளார். இலங்கைக்குத் திரும்பினால், சம்பந்தப்பட்ட அரசியல்வாதி தன்னைக் கொன்றுவிடுவார் என்றும் அந்த பெண் அச்சம் வெளியிட்டுள்ளார்.