இலங்கை

நளிந்த அனுராதபுரம் மருத்துவமனைக்கு விஜயம்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று காலை அனுராதபுரம் மருத்துவமனைக்கான விஜயம் மேற்கொண்டுள்ளார். அனுராதபுரம் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய சந்தேக நபர் ஒருவரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் எழுந்துள்ள பதற்ற நிலையைத் தணிக்கும் வகையில் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மருத்துவமனையின் பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோருடன் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றையும் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுப்பதற்கு அரசாங்கத்தின் சார்பில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *