450 பயணிகள் மற்றும் படையினருடன், தொடருந்தை கடத்திச் சென்ற ஆயுதமேந்திய போராளிகளுடன், பாகிஸ்தான் இராணுவம் 24 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு கொடிய மோதலில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனிம வளம் மிக்க தென்மேற்கு பலூசிஸ்தான்(Balochistan )மாகாணத்தில் செயல்படும் போராளி பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை இராணுவம் இந்த கடத்தலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றது.
இன்று பிற்பகலில், 190 பணயக்கைதிகள் மீட்கப்பட்டனர் மற்றும் 30 போராளிகள் கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்பு தரப்புகள் தெரிவித்துள்ளன.
இன்னும் எத்தனை பேர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
100ற்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போராளிகள், இந்த கடத்தலில் ஈடுபட்டதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அவர்கள், எந்தத் தீங்கையும் ஏற்படுத்தவில்லை என்று மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளானர்.
சம்பவத்தின் போது, குறைந்தது 10 பொதுமக்கள் மற்றும் பாகிஸ்தான்(Pakistan) பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அரச மற்றும் தொடருந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள கையாளுபவர்களுடன் தொடர்பில் இருந்ததாக பாதுகாப்பு தரப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
பாகிஸ்தானின் இராணுவமும் அரசாங்கமும் நீண்ட காலமாக ஆப்கானிஸ்தான் போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம் அளிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன, இதை அதன் தலிபான் தலைவர்கள் மறுத்துள்ளனர்.
காயமடைந்த ஏராளமான பணயக்கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், இன்னும் கடத்தப்பட்டவர்களை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.