இலங்கை

பூசா சிறைச்சாலை அதிகாரி கொலை : ஆதாரங்கள்

பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில், பூசா சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரியான சிறிதத் தம்மிக்க நேற்று (13) மாலை துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.அக்மீமன, தலகஹபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில், நேற்று (14) மாலை 4:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், பிஸ்டல் வகையைச் சேர்ந்த துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிதாரி அவரது தலைப் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்ததாகவும் எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறிதத் தம்மிக்க, கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் அதிகாரியாக சில காலம் பணியாற்றியிருந்தார்.

பணியாற்றிய காலத்தில் அவருக்கு பாதாள உலகத்திலிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், தற்போது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படுகொலை தொடர்பாக, அக்மீமன காவல்துறையினர் உள்ளிட்ட நான்கு காவல்துறை குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *