நீர்கொழும்பு ஹோட்டல் ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மற்றுமொரு ஊழியரை கத்தியால் குத்தியதில் உயிரிழந்துள்ளார்.
பழைய நீர்கொழும்பு ஜாஎல வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, ஊழியர்களில் ஒருவர் மற்ற ஊழியரின் கழுத்து மற்றும் காலில் கத்தியால் தாக்கியுள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல்
கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த ஊழியர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய குமார என்ற நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் மற்றைய ஊழியர், பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.