உலகம்

43 நாடுகளின் மக்களுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்கா

43 நாடுகளின் குடிமக்களை இலக்கு வைத்து, அமெரிக்கா, பயணத் தடையை விதிப்பது தொடர்பில், பரிசீலித்து வருகிறது.

11 நாடுகள் “சிவப்பு பட்டியலில்” உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான், பூட்டான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளே அவையாகும்.

பயணக்கட்டுப்பாடு, ஆனால் துண்டிக்கப்படாத 10 நாடுகளின் “செம்மஞ்சள்” பட்டியலில் அடக்கப்பட்டுள்ளன.

நாடுகளின், பணக்கார வணிகப் பயணிகள், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம், ஆனால் புலம்பெயர்ந்தோர் அல்லது சுற்றுலா விசாக்களில் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பட்டியலில் உள்ள குடிமக்களும் விசா பெறுவதற்கு கட்டாய நேரில் நேர்காணல்களுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அதில் பெலாரஸ், எரித்திரியா, ஹெய்ட்டி, லாவோஸ், மியான்மார், பாகிஸ்தான், ரஷ்யா, சியரா லியோன், தெற்கு சூடான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகியவை அடங்கும்.

தவிர திட்டத்தில் 22 நாடுகளின் வரைவு “மஞ்சள்” பட்டியலில் அடங்கப்பட்டுள்ளன.

பட்டியலில், அங்கோலா, என்டிகுவா, பார்புடா, பெனின், புர்கினா பாசோ, கம்போடியா, கெமரூன், கேப் வெர்டே, சாட், கொங்கோ குடியரசு, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, டொமினிகா, எக்குவடோரியல் கினியா, காம்பியா, லைபீரியா, மலாவி, மாலி, மவுரித்தேனியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, சாவோ டோம் மற்றும் பிரின்சிப், வனுவாட்டு மற்றும் சிம்பாப்வே ஆகியவை அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *