அமெரிக்க நலன்களுடன் ஒத்துப்போகும், ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை அறிந்துகொள்ள கேள்வித்தாளை அனுப்பியுள்ளது. இலங்கை உட்பட, அமெரிக்க நிதியைப் பெற்ற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கே, அமெரிக்க அரசாங்கம், இந்தக் கேள்வித்தாளை அனுப்பியுள்ளது.
பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் திட்டங்கள், பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்கிய திட்டங்களா என்பது கேட்கப்பபட்டுள்ளது. திட்டம், காலநிலை அல்லது சுற்றுச்சூழல் நீதி திட்டம் அல்லது அத்தகைய கூறுகளை உள்ளடக்கியுள்ளதா என்பதும், கேட்கப்பட்டுள்ளது.
சீனா உட்பட தீய செல்வாக்கை எதிர்ப்பதற்கான முயற்சிகளை திட்டம் நேரடியாக எவ்வளவு பாதிக்கிறதா? இந்த திட்டம், அமெரிக்க விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்த அரிய பூமி கனிமங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளை நேரடியாக பாதிக்கிறதா? திட்டம், சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த அல்லது அமெரிக்க எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த நேரடியாக பங்களிக்கிறதா? என்ற கேள்விகளும் அடங்கியுள்ளன.
உங்கள் அமைப்பு கம்யூனிசம், சோசலிசம், சர்வதிகாரம் அல்லது அமெரிக்க எதிர்ப்பு நம்பிக்கைகளை ஆதரிக்கும் வேறு எந்த அமைப்புடன் இணைந்து செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா? திட்டம், அமெரிக்க இறையாண்மையை வலுப்படுத்துகிறதா? சீன மக்கள் குடியரசு, ரஷ்யா, கியூபா அல்லது ஈரானிடமிருந்து உங்கள் அமைப்பு எந்த நிதியையும் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா? போன்ற கேள்விகளும் அமெரிக்க அரசாங்கத்தின் கேள்விதாளில் அடங்கியுள்ளன.