வங்கக்கடலில் இந்தவருடத்தில் உருவாகும் காற்றழுத்தங்கள் புயலாக வலுப்பெற முக்கிய பங்காற்றும் அலைவுகள் விடைபெற்றுள்ளன.
Kelvin wave வங்கக்கடலில் இருந்து முற்றாக விலகிய நிலையில், MJO பசுபிக் பகுதியில் (முக்கியமாக தென்சீனகடல்) நிலவிவருகிறது.
இதன்காரணமாக வங்கக்கடலுக்குள் காற்றழுத்தங்கள் உந்தப்பட அதிக வாய்ப்பிருந்தாலும் அவை புயலாக உருவலுப்பெற வாப்புக்கள் இல்லை.
நாளை (14) தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த பகுதி, மேற்குநேக்கி சற்று வேகமாக நகர்ந்து 15 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகவும் 16 ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையவும் சாத்தியமுள்ளது.
16 ஆம் திகதி முற்பகல் அது திருகோணமலைக்கு கிழக்காக 153 கடல்மைல் தொலைவில் நிலவி, தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து 17 ஆம் திகதி காலை/முற்பகல் முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையே கிழக்காக 95 கடல்மைல் தொலைவில் நிலவவுள்ளது.
17 ஆம் திகதி மாலை புதுச்சேரிக்கு கிழக்காக 105 கடல்மைல் தொலைவில் நிலவவும், 18 ஆம் திகதி இரவு புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே வலுக்குறைந்து கரையைக்கடக்கவும் வாய்ப்புள்ளது
மழை நிலைமை
16 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் மழை ஆரம்பித்து படிப்படியாக வடமாகாணத்திலும் பரவலடையும். கிழக்கில் கனமழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
17 ஆம் திகதி யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு, வவுனியா,மன்னார் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணத்திம் மேற்கு பகுதிகள்,தீவகம், முல்லைத்தீவு மேற்கு, வவுனியா வடக்கு, மன்னார் கிழக்கு பகுதிகளில் கனமழை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
இலங்கையில் 17 ஆம் திகதி பிற்பகலுடன் மழை நிலைமை நீங்கிக்கொள்ளும்,
தமிழகத்தில் சென்னை தொடக்கம் நாகபட்டினம் வரை கிழக்கு கரையோர மாவட்டங்களில் 16 ஆம் திகதி இரவிலிருந்து மழை கிடைக்க ஆரம்பிக்கும்
இதேபகுதிகள், மத்திய உள் மாவட்டங்களில் 17 ஆம் திகதியும் மழை கிடைக்க, 18 ஆம்திகதி சென்னை மற்றும் அதனை அண்டிய வட தமிழக மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பதிவாகும்.
19ஆம் திகதி கேரள, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுபகுதிகளில் மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
அடுத்த சுழற்சி 21 ஆம் திகதி உருவாகி மிக மெதுவாக நகரவுள்ளது.