2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று இந்தியன் 2. 1996ல் வெளிவந்து ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தனர்.
கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் கடந்த ஜூலை மாதம் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. மேலும் பலராலும் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் இந்தியன் 3 நேரடியாக OTTல் வெளியாகிறது என பேச துவங்கிவிட்டனர்.இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
“இந்தியன் 2 படத்திற்கு நெகட்டிவான விமர்சனம் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது பரவாயில்லை. கேம் ஜேஞ்சர் படத்துடன் சேர்த்து, இந்தியன் 3 படத்தை சிறப்பாக உங்களுக்கு கொடுப்பேன்.” என ஷங்கர் கூறியுள்ளார்.மேலும், இந்தியன் 3 திரைப்படம் திரையரங்கில் தான் வெளிவரும் என்றும் ஷங்கர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் OTT ரிலீஸ் குறித்து வெளிவந்த வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Paristamilnews.com