பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அட்லீ. முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்தார்.
ராஜா ராணி வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் உடன் இணைந்து தெறி எனும் வெற்றி படத்தை கொடுத்தார். தொடர்ந்து மெர்சல் மற்றும் பிகில் என விஜய் – அட்லீ கூட்டணி வெற்றி கனிகளை பறித்தது.
இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஜவான் படத்தை இயக்கி ஷாருக்கானின் கேரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக ஜவான் அமைந்தது.
அடுத்து கமல் ஹாசன் மற்றும் சல்மான் கான் இருவரையும் வைத்து புதிய படத்தை அட்லீ இயக்கவுள்ளார் என பேசப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
இந்த நிலையில், அட்லீ குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இயக்குநர் அட்லீ தனது உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் அனைவருக்கும் சொந்தமாக ஃபிளாட் வாங்கி கொடுத்துள்ளாராம். இந்த தகவலை பத்திரிகையாளர் அந்தணன் பகிர்ந்துள்ளார்.
“தான் சம்பாரித்தால் மட்டுமே போதும் என இருக்கும் இந்த திரையுலகில், தன்னுடன் வேலை பார்த்த உதவி இயக்குனர்களுக்கு ஃபிளாட் வாங்கி கொடுத்துள்ளார் இயக்குநர் அட்லீ” என அவர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
Paristamilnews.com