நாட்டிலுள்ள மோசடியான தனியார் கல்வி நிறுவனங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என இலங்கை நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணைந்த நிறுவனங்களின் ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலி்ன் போதே பிரதமர் இதனைத் கூறியுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர்
“மக்கள் கோரும் கல்வி சீர்திருத்தங்களுக்கு அப்பால் விரிவான விளக்கமொன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
கல்வி தொடர்பான விரிவான விளக்கத்தை மக்கள் கோருகின்றனர்.
மேலும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளியை நீக்கி, தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை.
கன்னங்கராவின் கல்விச் சீர்திருத்தத்துடன் ஏற்பட்ட கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவைப்படுகிறது. அதனை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது‘‘ என்றார்.