இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொடரிகோ இன்று (30) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த பதவியில் தற்போது கடமையாற்றும் லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவின் சேவை நீடிப்பு நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஓய்வு பெறுவதை அடுத்து, இலங்கை இராணுவத்தின் 25ஆவது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கவுள்ளார்.
மேஜர் ஜெனரல் ரொட்ரிகோவின் நியமனம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.