இலங்கை

கிளிநொச்சியில் ஐயருக்கு அடி !! கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!!

கிளிநொச்சியில் ஐயருக்கு தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொலிஸார் ஆதரவாக இருப்பதாக கூறி சிவசேனா அமைப்பினரின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று (13 .01.2025) மாலை இடம்பெற்றது.

கிளிநொச்சியில் இந்து மதகுரு ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவரது உருத்திராட்ச மாலை அறுத்தெறியப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி கோரி கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநொச்சியில் அண்மைக்காலமாக ரவுடிகளின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகிறது என்றும் அவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தப் போக்குடன் காணப்படுகின்றனர் எனவும் தெரிவித்த போராட்டக்காரர்கள்

473332743 2538930516312160 1390517878069566910 n

நீதி கோரி பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவருடன் சமரசத்துடன் செல்லுமாறு கோரியுள்ளனர்.
இது வேதனையான விடயம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்ட மதகுமார்கள் தெரிவித்துள்ளனர்.

473676836 2538930519645493 4252306085394518689 n

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *