பொருட்களின் விலையை கட்டுப்படுத்தவும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் சதோச விற்பனை நிலையங்களை 1000 ஆக திட்டத்தை வர்த்தக வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) அறிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில்(Anuradhapura) புதுப்பிக்கப்பட்ட சதோச விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மூன்று மாதங்களில், அரசாங்கம் பொருட்களின் விலையை 17வீதமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 1,000 விற்பனை நிலையங்களாக விரிவுபடுத்தும் இலக்குடன், 2025 ஆம் ஆண்டில் 150இற்கும் மேற்பட்ட சதோச விற்பனை நிலையங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களில், பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருட்களை வழங்குவதை உறுதிசெய்து, 40 அத்தியாவசியப் பொருட்களின் விலையை 8 வீதத்தால் குறைத்துள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.