அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக சஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார். உர மானியம் மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்றில் பங்குபற்றிய போது சஜித் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்களை 33 வீதத்தினால் குறைக்க முடியும் என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதாக சுட்டிக்காட்டியுள்ளார். உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் வரையில் நாடாளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.