இரண்டு மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட காலத்தில் நாடு வங்குரோத்து அடைந்திருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது சர்வதேச கடன் மற்றும் நிதி தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கை குறித்த தரப்படுத்தல்களை உயர்த்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் பங்கேற்ற போது தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களினால் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.