சினிமா

தனுஷின் இட்லி கடை படம் எப்படி.. ஓபனாக கூறிய நித்யா மேனன்

தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன். அவரே இயக்கி, நடித்த அப்படம் தனுஷின் திரைப்பயணத்தில் 50வது படம், சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வந்தவர் இப்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார்.

போர்தொழில் இயக்குனர் படம், மாரி செல்வராஜுடன் படம் என அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகியுள்ளார். உறவினரை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார், பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ஒரு பேட்டியில் தனுஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை பற்றி பேசியுள்ளார். இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான ரோல் கிடைத்திருக்கிறது. இட்லி கடை திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் இதயத்தை தொடும் படமாக இருக்கும். எமோஷ்னலாகவும், உணர்வுகள் ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைக்கும் படியும் இருக்கும் என கூறியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *