அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது அநுரகுமாரவுக்கு வழங்கப்பட்ட இராணுவ மரியாதையானது இரு வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வரவேற்பானது இதுவரை காலங்களிலும் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டதாகவே காணப்படுகிறது. ஆயுதம் தாங்கிய படையினர் விமான நிலையத்தில் வரவேற்ற சூழ்நிலையும், அதன்பின்னர் வழமை போன்று அந்நாட்டு ஜனாதிபதியுடனான இராணுவ மரியாதையும் இடம்பெற்றது.
படைத்துறை ரீதியாகத்தான் இலங்கையானது சீனாவுக்கு அவசியமாகிறது. சீனாவைப் பொறுத்தவரையில் அநுரகுமார திசாநாயக்கவை இரண்டு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சியில் ஈடுபட்ட தலைவராகத்தான் பார்க்கிறது.
இதற்கு அப்பால் இரு நாடுகளும் செய்து கொண்ட உடன்பாடுகளைப் பார்க்கும் போது பெருமளவு இராணுவ நலன் சார்ந்துதான் காணப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அருஸ் குறிப்பிட்டுள்ளார்.