தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் வெற்றியை பதிவு செய்த இவர், மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை செய்துள்ளார்.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மிகவும் பிஸியாக வலம் வரும் சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை காணலாம்.
கேங்கர்ஸ்:
சுந்தர் சி இயக்கத்தில் அவ்னி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பு தயாரித்துள்ள திரைப்படம் கேங்கர்ஸ். இப்படத்தில் சுந்தர் சி நடித்தும் உள்ளார். இணைந்து வடிவேலுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் 2:
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கலகலப்பு 3:
சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது.
அரண்மனை 5:
சுந்தர் சி இயக்கியதில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த படம் அரண்மனை. இதன் 4 – ம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 5 – ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர் சி. , ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளார்.