சினிமா

பிக் பாஸில் அர்ச்சனாவிற்கு பரிசு தொகையுடன் வீடு, கார்.. முத்துக்குமரனுக்கு இல்லையா!

பிக் பாஸ் 8ன் வெற்றியாளராக முத்துக்குமரன் மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாப் 2வில் முத்துக்குமரன் சௌந்தர்யா இருந்த நிலையில், விஜய் சேதுபதி முத்துக்குமரனின் கையை தூக்கி, இவர் தான் வெற்றியாளர் என அறிவித்தார். முத்துக்குமரனின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், சில கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா. டைட்டில் வென்றபோது, இவருக்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள Villa plot மற்றும் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள Maruti Suzuki Grand Vitara கார் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்த சீசன் வெற்றியாளரான அர்ச்சனாவுக்கு பரிசு தொகையுடன் சேர்த்து, இத்தனை பரிசு கொடுத்துள்ள நிலையில், சீசன் 8ன் வெற்றியாளர் முத்துக்குமரனுக்கு, ஏன் பரிசு தொகை மட்டுமே வழங்கப்பட்டது. வேறு பரிசு எதுவும் வழங்கவில்லை என்றும், பரிசு தொகையிலும் ரூ. 9.5 லட்சம் குறைக்கப்பட்டது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *