2023 ஆம் ஆண்டில் சிறீலங்கன் எயர்லைன்ஸ் (srilankan airlines) இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma) குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2022ஆம் ஆண்டில் சிறீலங்கன் எயர்லைன்ஸ் ரூ.73.254 பில்லியன் இழப்பைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 3.8 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 617 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 120 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 298 பில்லியன் இழப்பைச் சந்தித்தது. 2023ஆம் ஆண்டில் 61 பில்லியன் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.