உலகம்

97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு

ஆசிய நாடான இந்தோனேசியா 97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தோனேசியா புதிய e-Visa on Arrival (e-VoA) திட்டத்தால் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு பயண அனுபவத்தை எளிதாக்கியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளில் இருந்து பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். பாலி (Bali) மற்றும் பிற சுற்றுலா தலங்களைக் காண பயணிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தோனேஷியாவின் e-VoA திட்டம் பயணிகளுக்கு முழுமையாக ஓன்லைனில் விசா விண்ணப்பத்தை முடிக்க வாய்ப்பளிக்கிறது.

இதற்கான கட்டணத்தையும் ஓன்லைனில் செலுத்தி, பயணத்திற்கு முன் விசாவை பெறலாம். நடவடிக்கையால் 2025-ல் 14 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கட்டண விவரங்கள்
– இயல்பான e-VoA கட்டணம்: 500,000 IDR

– VFS Global சேவை கட்டணம்: 230,000 IDR

தேவையான ஆவணங்கள்
1. கடவுச்சீட்டு: வருகை திகதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்.

2. புகைப்படம்: சமீபத்திய புகைப்படம்.

3. Return அல்லது Onward Ticket: பயணத்தை நிரூபிக்கும் ஆதாரம்.

விசா விண்ணப்பிக்கும் நடைமுறை
1. தகவல்களை அளிக்கவும்: VFS Global தளத்தில் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.

2. கட்டணத்தை செலுத்தவும்: ஓன்லைனில் பாதுகாப்பாக கட்டணத்தை செலுத்தவும்.

3. விசாவைப் பெறவும்: e-VoA-வை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

இந்த திட்டம் 97 நாடுகளின் குடிமக்களுக்கு திறந்துள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அடங்கும். e-VoA திட்டம், இந்தோனேசியாவிற்கு சுற்றுலா பயணிகளை எளிமையாக வரவேற்கும் வகையில் சிறந்த முயற்சியாக அமைகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *