இந்தியா

நிச்சயமாக திமுக தான் ஆட்சி அமைக்கும்- மு. க. ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆளுநர், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜயை விமர்சித்த உரையாற்றினார். பிற கட்சி பொறுப்பில் பணியாற்றிய நீங்கள் தலைமை முறையாக இல்லை என்பதால் தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள்.

பிற கட்சியிலிருந்த நீங்கள் தலைமை சரியில்லை என்பதை உணர்ந்து வர வேண்டிய கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள். திமுக நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் அண்ணா வடசென்னையில் கொட்டும் மழையில் தொடங்கிய இயக்கம். 1949ல் திமுக தொடங்கப்பட்ட நிலையில் 1957ல் தான் தேர்தல் களத்தை சந்தித்த வளர்த்தெடுக்க இயக்கம் தி.மு.க.

1957ல் 15 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். 1962ல் 50க்கும் மேற்பட்ட இடத்தில் வென்று எதிர்க்கட்சியானது திமுக. ஆட்சியில் அமர்வதற்கு அல்ல; ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற தான் திமுக தொடங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் அக்கட்சியின் பெயரை உச்சரிக்கலாம். கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை அடையாளப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை.

திராவிட மாடல் என்று சொன்னாலே ஆவேசம் வருகிறது. மதத்தை மையமாக வைத்து பேசும் ஆளுநரால் திமுக மேலும் வளருகிறது. திமுகவுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன். 7வது முறையாக நிச்சயமாக தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறேன் என்று கூறினார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *