இலங்கை

2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி அணியில் சாமரி அத்தபத்து

இலங்கையின் கிரிக்கெட் வீராங்கனையான சாமரி அத்தபத்து 2024ஆம் ஆண்டுக்கான, சர்வதேச கிரிக்கெட் சம்மேளன மகளிர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். 9 போட்டிகளில் 45 ஓட்டங்கள் மற்றும் 9 விக்கெட்டுகள் என்ற அடிப்படையில் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாமரி அத்தபத்து 2024ஆம் ஆண்டுக்கான, தனது முதலாவது ஒருநாள் போட்டியை ஏப்ரல் மாதமே ஆரம்பித்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து, இறுதிப் போட்டியில் 195 ஓட்டங்களை பெற்று, தமது தொழில் வாழ்க்கையில் சிறந்த ஓட்டங்களை பதிவு செய்தார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கையின் சொந்தத் தொடரில் அவரது தலைமையிலான அணி 3-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியைப் பெற்றது. இதன்போது இறுதிப்போட்டியில் சாமரி அத்தபத்து ஒரு அற்புதமான 91 ஓட்டங்களை பெற்றார். 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் சம்மேளன ஆண்கள் டெஸ்ட் அணியில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் 2024 ஆம் ஆண்டில் கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் பங்களாதேஸ் சுற்றுப்பயணத்தின் போது, முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *