இலங்கை

யோஷிதவின் கைது தொடர்பில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு!

இலகுவில் ஆட்சியை கைவிடப் போவதில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர(Aruna Jayasekara) தெரிவித்துள்ளார். சிரமப்பட்டு ஆட்சியைப் பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பெலியத்த பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது  ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

யோஷிதவை(Yositha Rajapaksa) கைது செய்வது தொடர்பில் நேற்று முன்தினம் பேசப்பட்டதாகவும் இந்த விடயத்தை தாம் வெளியே சொல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். யோஷிதவை கைது செய்வது போதுமானதல்ல என தற்பொழுது விமர்சனங்கள் வெளியிடப்படும் மற்றுமொருவரை கைது செய்யுமாறு கோரப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எவரைக் கைது செய்வது என்றாலும் சரியான சட்ட விதிகள் பின்பற்றி கைது செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா போன்று நடந்து கொள்ள முடியாது சரியான முறையில் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஆறு மாத காலத்தில் எம்மால் இவர்களை கைது செய்ய முடியாவிட்டாலும் இதனை கைவிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். ஆட்சியை கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை விடவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல மடங்கு முயற்சிக்க வேண்டியிருக்கும் என அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *