டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம், அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் முடக்கி, புதிய உதவிகளை நிறுத்த முடிவு செய்ததால் பாதிக்கப்படும் நாடுகளில் இலங்கையும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, அனைத்து அமெரிக்க இராஜதந்திர பணியாளர்களுக்கும் தொடர்பான தகவல்களை அனுப்பியுள்ளார்.
வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனமான யுஎஸ்எய்ட் ஆகியவற்றிலிருந்து உலகளாவிய திட்டங்களுக்கு செல்லும் பில்லியன் கணக்கான டொலர் நிதியுதவிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக தகவல்படி, 1956 முதல் அமெரிக்கா, இலங்கைக்கு 2 பில்லியன் டொலர்களுக்கு மேல் (கிட்டத்தட்ட ரூ. 720 பில்லியன்) உதவியை வழங்கியுள்ளது. ட்ரம்பின் உத்தரவு, அபிவிருத்தி உதவி முதல் உக்ரைனுக்கான இராணுவ உதவி வரை அனைத்தையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.