உலகம்

அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக முன்னாள் செய்தி தொகுப்பாளர்

முன்னாள் ஃபாக்ஸ் செய்தி (Fox News) தொகுப்பாளரான பீட்டர் ஹெக்சேத் (Pete Hegseth) அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது நியமனத்திற்காக நடைபெற்ற செனட் வாக்கெடுப்பில், ஹெக்சேக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஹெக்சேத்துக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாகவே அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ட்ரம்ப்பால் குறித்த பதவிக்கு பீட்டர் ஹெக்சேத்தை முன்னிறுத்துவது குறித்து ஆரம்பம் முதலே பல சர்ச்சையான சூழல் நிலவி வந்தது.

பீட்டர் ஹெக்சேத் அமெரிக்க பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினராக இருந்ததோடு, பென்டகன் போன்ற ஒரு பெரிய அமைப்பை வழிநடத்த தகுதியற்றவர் என்று பல இராணுவ நிபுணர்களால் விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *