உலகம்

சுற்றுலாப் பயணிகள் வேலை பார்க்கலாம் என அனுமதித்த நாடு

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் போது, அலுவலகப் பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கும் வகையில் புதிய விசா விதிகளை நியூசிலாந்து அறிமுகப்படுத்தவுள்ளது. சுற்றுலாத்துறையும் பொருளாதாரமும் வளர்ச்சி காணும் என்றே நியூசிலாந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நியூசிலாந்தில் பயணம் செய்யும் போது மக்கள் வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் ஜனவரி 27 முதல் பார்வையாளர் விசா விதிகள் மாறும் என்று குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். மக்கள் எங்கள் நாட்டைப் பார்வையிடவும், வேலை செய்யவும் ஏற்ற இடமாகக் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை பேர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இங்கு வேலை செய்யவும் பயணம் செய்யவும் விரும்பும் மக்களை நியூசிலாந்து குறிவைத்துள்ளது என தெரிவித்துள்ளார். ஜனவரி 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய விசா விதிகளின் அடிப்படையில், நியூசிலாந்தில் பயணம் மேற்கொள்பவர்கள், தங்களின் வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணியாற்றலாம். நியூசிலாந்து நிறுவனத்திற்காக பணியாற்ற முடியாது. 92 நாட்களுக்கு மேல் பணியாற்றும் நபர்களிடம் வரி வசூலிக்கப்படும். நியூசிலாந்து சுற்றுலாவால் ஆண்டுக்கு 11 பில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.

நியூசிலாந்து மக்களுக்கு 200,000 வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நியூசிலாந்தின் பொருளாதாரம் தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்குள் நுழைந்தது என்றே கூறப்படுகிறது. சர்வதேச பார்வையாளர்கள் எண்ணிக்கை இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விடக் குறைவாக உள்ளதாகவே கூறப்படுகிறது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *