வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக ஏராளமான அரசு நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகள் காணப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில்நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு – 2025” இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது “பல அரச நிறுவனங்களை நடத்துவதற்கு இதுவரை ஏற்படுத்தப்பட்டுள்ள நிர்வாக அமைப்பு தோல்வியடைதுள்ளமை மட்டுமல்லாமல், இதன் நிர்வாக அமைப்பு மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைள் வரவுசெலவுத் திட்டத்தில் பெரிய சுமையாக மாறியுள்ளன. நிறுவனங்களை நாங்கள் பழைய கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. நிறுவனங்களில் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம். நிறுவனங்களை ஒன்றிணைத்து, பங்குச் சந்தைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகளை வெளியிடுவது சாத்தியமா என்பதை நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
நிறுவனங்கள் மற்றும் வாரியங்களைப் பற்றி சிந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதை வெளிப்படையாகச் சொல்வேன். நடவடிக்கைகளின் போது, சில நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் இணைக்கப்பட வேண்டியிருக்கும். நிறுவனங்கள் தங்கள் கவனத்தை மாற்ற வேண்டியிருக்கும். அந்த அடையாளப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.” என்றார்.