அரிசி ஆலை உரிமையாளர்கள், அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விடவும் கூடுதல் விலைக் நெல் கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு வழங்கும் உத்தரவாத விலையை விடவும் ஐந்து ரூபா கூடுதலாக வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. கூடுதல் விலைக்கு தனியாருக்கு தாம் நெல்லை விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விடவும் 5-6 ரூபா கூடுதலாக அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவதாகவும் அவர்களுக்கு நெல்லை விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உத்தரவாத விலையை ஒரு விவசாயிடம் இருந்து அதிகபட்சமாக ஐயாயிரம் கிலோ கிராம் எடையுடைய நெல்லை மட்டுமே அரசாங்கம் கொள்வனவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.