மின்சார சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கான கால அவகாசம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட உள்ளது. குறித்த திகதிக்கு முன்னர் மக்கள் தங்களது யோசனைகளை இலக்கம் 434, காலி வீதி, கொழும்பு 03 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க முடியும்.
தற்போது மின்சாரச் சட்டத்தில் திருத்தம் தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களை, ‘powermin.gov.lk’ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.