இலங்கை

கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகள்

இலங்கையில் புதிதாக கடவுச்சீட்டு பெறுவது புதுப்பித்துக் கொள்வது என்பது சவாலான ஒன்றாக மாறியுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் தற்போது மாதக்கணக்கில் காத்திருந்து அதனை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் முயன்று வருகிறது.

பெருந்தொகை பணத்தை லஞ்சமாக கொடுத்து அதனை பெற்றுக்கொள்ள வசதியான பலர் முயன்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நாட்டில் பிரபலமான பலர் இலட்சக்கணக்கில் பணத்தை அன்பளிப்பாக கொடுத்து தமது கடவுச்சீட்டுக்களை உடனடியாக பெற்றுக்கொள்வதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமது சந்தோஷத்தின் நிமித்தல் சிறிய தொகையிலான பணத்தை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர். எனினும் பெருந்தொகை பணத்தை கொடுத்து முக்கியஸ்தர்கள் பெற்றுச் செல்கின்றனர். இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் பிரச்சினைகள் இரண்டு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். சந்திப்பு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *