24 மணிநேரமும் கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதன் மூலம் கடவுச்சீட்டு வரிசையை படிப்படியாக 2 மாதங்களில் குறைக்க முடியும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறிப்பிட்டுள்ளார்.
நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களை மூன்று வேலை நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் இந்தத் திட்டத்தினை செயற்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடவுச்சீட்டு பெற வரும் மக்களின் பாதுகாப்பிற்காக திணைக்களத்திற்குள் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை நிறுவுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.